* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள யாத்ரிம் நகரில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர். மேலும் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
* தென்ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணம் மற்றும் டர்பன் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு 6 மாத குழந்தையும் அடங்கும்.
* சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 37 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
* ராணுவ ஆட்சி நடைபெறும் சூடானில், ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நாட்டை ஆட்சி செய்துவரும் இடைக்கால ராணுவ சபையில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த 3 பேர் திடீரென தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.
* இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கிடைத்திருக்கும் முதற்கட்ட ஆதாரங்கள், இந்த தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில் நடந்ததை காட்டுவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.