உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை 4-வது முறையாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி


* ஜிம்பாப்வே நாட்டில் மாஸ்கோனலாந்த் மாகாணத்தில் ஒரு தேவாலயத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 13 பேர் பலியானார்கள்.

* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள காக்கர் என்ற கிராமத்தில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

* கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பென்டிக்டோன் நகரில் 5 கி.மீ. இடைவெளியில் 3 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

* தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை 4-வது முறையாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார்.

* தாய்லாந்தில் சோங்கிரன் என்று அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாடத்தின் போது, கடந்த 5 நாட்களில் நடந்த சாலை விபத்துகளில் 300 பேர் உயிர் இழந்ததாகவும், சுமார் 3 ஆயிரம் காயம் அடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானில் ஹெரட் மாகாணத்தில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 5 பேர் பலியானதாகவும், 17 பேர் மாயமாகி இருப்பதாகவும் தெரிகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்