* 1982-ம் ஆண்டு லெபனான் போரின் போது மாயமான இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரரின் உடலை சிரிய எல்லைப்பகுதியில் தங்கள் நாட்டு வீரர்கள் கண்டெடுத்ததாக ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் தெரிவித்தார்.
* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மின்டனாவ் மாகாணத்தில் பாதுகாப்புபடை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் கடந்த 3 நாட்களாக நடந்த பயங்கரவாத தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* வெனிசூலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோ மீது அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.
* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான சொத்துகளை மறைத்தார் என புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
* அமெரிக்க-மெக்சிகோ எல்லையை மூடுவதால் யாருக்கும் பயன்இல்லை என மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் கூறினார்.