உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

தங்கள் நாட்டுக்கான ஜெர்மன் தூதர் டேனியல் மார்ட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி வெனிசூலா அரசு அவரை நாடு கடத்தியது.

* பாகிஸ்தானுக்கு2 நாள் பயணமாக சென்றுள்ள சீனாவின் துணை வெளியுறவு மந்திரி காங் சுவான்யூ, இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க சீனா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

* வடகொரியாவுடன் பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வுகாண அந்நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன்னுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடந்த விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

* தங்கள் நாட்டுக்கான ஜெர்மன் தூதர் டேனியல் மார்ட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி வெனிசூலா அரசு அவரை நாடு கடத்தியது.

* மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளுக்கு உதவி செய்து வரும் அமெரிக்க பத்திரிகையாளர்கள்59 பேரிடம் விசாரணை நடத்த குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆணையம் முடிவு செய்துள்ளது.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.