உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இவர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்டு, நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தங்க சுரங்கத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேர் உயிர் இழந்தனர். ஒருவாரமாக நடந்து வரும் மீட்பு பணியில் மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

* அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் பிரகடனப்படுத்தி உள்ள அவசர நிலையை ரத்து செய்யும் தீர்மானம் மீது செனட் சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்படும்போது தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுபோடுவோம் என டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...