* சிங்கப்பூரில் இந்திய தூதரக வளாகத்தில், காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிர் இழந்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
* ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவருவதற்கான தலீபான் பயங்கரவாதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையிலான புதிய பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
* அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமியில் இருந்து டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற போயிங் 767 ரக சரக்கு விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
* சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தில் கிழக்கு பகுதி கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது மீன்பிடி கப்பல் மோதி நீரில் மூழ்கியது. இதில் அந்த கப்பலில் இருந்த 5 பேரும் மாயமானார்கள். அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
* ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜய் லாவ்ரோவ் 2 நாள் பயணமாக நேற்று வியட்நாம் சென்றார். வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் வியட்நாம் சென்றிருக்கும் நிலையில் ரஷிய வெளியுறவு மந்திரியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
* சிரியாவின் ஹமா பிராந்தியத்தில் உள்ள சலாமியா நகரில் சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் ஒரு பஸ் சிக்கியது. இதில் 24 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.
* நைஜீரியா நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் பலியானார்கள்.