உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்கா அச்சுறுத்தலாக இருப்பதாக கியூபா வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.

* அமெரிக்காவில் தனியார் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து ரகசிய தகவல்களை திருடிய வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பளித்தது.

* ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், தற்போதைய உலகளாவிய சவால்களை கருத்தில் கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர் திருத்தங்களை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 377 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை பொருட்படுத்தாமல் ஈரான் மீதான தற்போதைய கொள்கைகளை அமெரிக்கா தொடரும் என வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவின் பொறுப்பற்ற நடத்தை நாடுகளுக்கிடையில் மோதல்கள் மற்றும் வர்த்தக போர்களை தூண்டுவதாகவும், இதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அமெரிக்கா அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கியூபா வெளியுறவு மந்திரி புருனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.

* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியிலுள்ள படாக்சன் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.