உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மினாஸ் ஜெராய்ஷ் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை.

* ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் பக்ரைனில் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் எனினும் அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் பக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

* ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள யோஷிஹைட் சுகா, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் துறைமுக நகரமான குவாங்சோவில் மழலையர் பள்ளிக்கு அருகே நடந்த கத்தி குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள தாக்கர் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடியை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்களும், போலீசார் 3 பேரும் கொல்லப்பட்டனர்.