உலக செய்திகள்

உலகைச்சுற்றி....

லிபியா நாட்டின் தலைநகரமான திரிபோலியில் பல்வேறு போராளி குழுக்கள் இயங்கி வருகின்றன.

* லிபியா நாட்டின் தலைநகரமான திரிபோலியில் பல்வேறு போராளி குழுக்கள் இயங்கி வருகின்றன. அங்கு 2 போராளிகள் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

* ஊழல் வழக்கில் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். அவர் நன்றாக இல்லை என்று கூறுகிற டாக்டர்கள், இன்னும் பல்வேறு பரிசோதனைகள் செய்துதான் சிகிச்சையை முடிவு செய்ய முடியும் என கூறி உள்ளனர்.

* அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் சிகாகோ போலீஸ் அதிகாரி ஜேசன் வான் டைக்கிற்கு 81 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் இடையே உள்ள பிரச்சினைகளை அர்த்தமுள்ள பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்வார்கள் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்த மாட்டோம் என தலீபான் பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.

* ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணத்தின் தலைநகரான மைமானாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.


கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...