உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

கிரிமியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது.

தினத்தந்தி

* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் உள்நாட்டு படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். பாரா மாகாணத்தில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 10 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

* அமெரிக்காவில் மத்திய வங்கி தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு ஜனாதிபதி டிரம்ப் பரிசீலிக்கிறார் என்ற தகவலை நிதி மந்திரி ஸ்டீபன் மனுசின் மறுத்துள்ளார்.

* கிரிமியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 65 நாடுகளும், எதிராக 27 நாடுகளும் வாக்களித்தன. 70 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. பெரும்பான்மையானோர் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேறியது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான 2 ஊழல் வழக்குகளில் இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு கோர்ட்டு (தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு) இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது.

* பாலஸ்தீனத்தின் நாடாளுமன்றத்தை கலைக்க அரசியல் சாசன கோர்ட்டு முடிவு எடுத்துள்ளது என அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். இதை ஹமாஸ் இயக்கம் எதிர்க்கிறது.


பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்