* அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்த மலிவு கட்டண சுகாதார காப்பீடு திட்டமான ஒபாமா கேர் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அந்த நாட்டின் டெக்சாஸ் மாகாண மத்திய கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
* மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது. இதை அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா ஏற்கனவே அங்கீகரித்து உள்ளது.
* கனடாவில் உள்ள வான்கூவர் நகர விமான நிலையத்தில் ஹூவாய் நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ் கடந்த 1ந்தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில், நேர்மையான முறையில் நீதி விசாரணை நடைபெறும் என அமெரிக்காவும், கனடாவும் உறுதி அளித்துள்ளன. மேலும், சீனா பிடித்து வைத்துள்ள கனடா நாட்டினர் 2 பேரை விடுவிக்க வேண்டும் என அவ்விருநாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.
* லிபியாவில் இரு ஆயுத குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இரு குழுக்கள் இடையேயான இந்த மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரிய வரவில்லை.