* வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் வேகமாக சென்ற பஸ் மோதி 2 வாலிபர்கள் உயிர் இழந்ததால் ஆத்திரம் அடைந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து சட்டத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 9-வது நாளை எட்டியது. இதையடுத்து சாலை விபத்துகள் தொடர்பான வழக்குகளில் அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க சட்ட அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.