உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

* மியான்மரில் இருந்து வங்காளதேசம் சென்று தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டி விட்டது.

* சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் ராஜூ (வயது 50) என்பவர் ஒரு பெண்ணை படுகொலை செய்து விட்டார். படுகொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி என நம்பப்படுகிறது. கொலையை செய்த 10 மணி நேரத்தில் கிருஷ்ணன் ராஜூ போலீசில் சரண் அடைந்தார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* சர்வதேச அளவிலான ஊழல், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் வெனிசூலா முன்னாள் துணை மந்திரி மற்றும் அந்த நாட்டின் முன்னாள் அதிகாரிகள் 3 பேரை அமெரிக்க விசாரணைக்காக ஸ்பெயின் கைது செய்துள்ளது.

* சீனாவில் உள்ளவர்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொள்வதற்காக சீன நாட்டினர் 61 பேர் கம்போடியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

* பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி கவர்னராக தாரிக் பஜ்வா என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து 23 எம்.பி.க்கள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

* வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் கூறி உள்ளார்.