* சீன அதிபராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜின்பிங்குடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் பேசி பாராட்டு தெரிவித்தார். மேலும், நவம்பர் மாதத்தில் சீனா வர ஆவலுடன் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். ஜின் பிங்குக்கு வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
* லெபனானில் இயங்கி வருகிற ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா போராளிகள் அமைப்பின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளித்தது.
* ஈராக்கில் மேற்கு எல்லை பகுதியில் உள்ள அல் காயிம், ராவா நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கான புதிய தாக்குதல்களை ராணுவம் தொடங்கி உள்ளதாக பிரதமர் ஹைதர் அல் அபாடி தெரிவித்துள்ளார்.
* ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அர்ஜெண்டினா நாட்டின் முன்னாள் மந்திரி ஜூலியோ டி விடோ கைது செய்யப்பட்டுள்ளார்.
* தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. முகாமுக்கு ஐ.நா.வின் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி சென்றிருந்தார். ஆனால் அங்கு அதிபர் சல்வா கீருக்கு எதிரான போராட்டம் நடந்ததின் காரணமாக நிக்கி ஹாலி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.