உலக செய்திகள்

உலகைச்சுற்றி...

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

* ஆப்கானிஸ்தானின் தாய்குந்தி மாகாணத்தில் கஜ்ரான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். அதே போல் 35 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? இதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் மார்கோசின் மனைவி இமெல்டா மார்கோசின் 90வது பிறந்தநாளையொட்டி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் சாப்பிட்ட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து