உலக செய்திகள்

ராசல் கைமாவில், பஸ், டாக்சி டிரைவர்களின் செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு; அதிகாரி பேட்டி

ராசல் கைமாவில் பஸ் மற்றும் டாக்சி டிரைவர்களின் செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தினத்தந்தி

இது குறித்து ராசல் கைமா போக்குவரத்து ஆணையத்தின் பொது மேலாளர் இஸ்மாயில் அல் பலூசி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ராசல் கைமா நகரில் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல உதவும் வகையில் பஸ் மற்றும் டாக்சி சேவைகள் செயல்பட்டு வருகின்றன. பொது பஸ் போக்குவரத்து சேவையானது ராசல் கைமா நகரில் இருந்து துபாய், சார்ஜா, புஜேரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மற்றும் டாக்சி டிரைவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் டிரைவர்கள், பயணிகளுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள

உதவியாக இருந்து வருகிறது. மேலும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அது குறித்த விவரமும் கிடைக்கிறது.

டிரைவர்களின் செயல்களை கண்காணிக்கிறது

குறிப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விபத்து உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் இதனை மதிக்காமல் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களை கண்காணிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது. மேலும் டிரைவர்கள் என்ன வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள், திடீரென வாகனத்தை வளைக்கிறார்களா, விதிமீறல் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்களா என்பதை கண்காணிக்க முடிகிறது.

சிறப்பு கேமரா

இதற்காக பஸ் மற்றும் டாக்சிகளின் முன்புறம் சிறப்பு கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவானது டிரைவர்கள் நல்ல உடல் நிலையில் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.பஸ் மற்றும் டாக்சிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் இருந்து ஆணையத்தின் கட்டுப்பாடு மையத்துக்கு தகவல் கிடைக்கிறது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உயர்தர பாதுகாப்பு வசதிகளுடன் இந்த போக்குவரத்து சேவை இயக்கப்பட இந்த புதிய தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்