ரோம்,
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. அவர் சிலுவை பாடுகளை அனுபவிப்பதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.
அதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. இந்த தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமை ஆகும். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.
இந்நிலையில், திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்கள் நோன்பு மற்றும் அமைதிக்கான நாளான மார்ச் 2, சாம்பல் புதன் தினத்தை உக்ரைனில் அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் அவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ள மற்றும் நம்பிக்கையற்ற அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். வன்முறையின் கொடூரமான தீமைக்கு ஜெபம் மற்றும் உபவாசம் போன்ற கடவுளின் ஆயுதங்களால் பதில் கிடைக்கும் என்று இயேசு நமக்குக் கற்பித்தார் உக்ரைனின் அமைதிக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம். என கூறினார்.