Image Courtesy: ANI 
உலக செய்திகள்

எல்லை பிரச்சினையை தீர்க்க அசாம்-அருணாசலபிரதேச முதல்-மந்திரிகள் பேச்சுவார்த்தை..!

எல்லை பிரச்சினையை தீர்க்க அசாம் மற்றும் அருணாசலபிரதேச முதல்-மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களான அசாம்-அருணாசலபிரதேசம் இடையே எல்லை பிரச்சினை இருந்துவருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு இடையே முதல் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது.

அப்போது, இரு மாநில எல்லை பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவிலான கமிட்டிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்-மந்திரி ஹிமந்த சர்மா இதை தெரிவித்தார். பிரச்சினைக்குரிய பகுதிகளில் இந்த கமிட்டிகள் கூட்டு நில அளவையை மேற்கொள்ளும். அது தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

எல்லை பிரச்சினை தொடர்பாக அசாம் முதல்-மந்திரியுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அருணாசலபிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்