உலக செய்திகள்

அஸ்ட்ரா செனகா - ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

அஸ்ட்ரா செனகா - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் பைசர் தடுப்பூசி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

அதேவேளையில், அஸ்ட்ரா செனகா- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவேக்ஸ் தடுப்பூசியும் உலக அளவில் கவனம் பெற்றது. ஏனெனில், இந்த தடுப்பூசிகளை பராமரிப்பது எளிது என்பதால், வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் பெரிதும் பயனாக இருக்கும் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், அஸ்ட்ரா செனகா - ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அஸ்ட்ரா செனகா - எஸ்கேபையோ (கொரிய குடியரசு) மற்றும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்