உலக செய்திகள்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஆப்கானிஸ்தான்,

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ ஆட்சியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர் என்று ஒரு அதிகாரி ஏ.எஃப்.பி கூறினார்.

பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிகுண்டு ஒன்று விசப்பட்டதாக நங்கர்ஹார் கவர்னர் செய்தித் தொடர்பாளர் அதாவுல்லா கோக்யானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பலியாகினர், மற்றும் 27 பேர் காயமடைந்தனர், என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய 18-வது ஆண்டு நினைவு நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது