மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் மேற்கில் தெபிக்-குவாடலஜாரா நெடுஞ்சாலையில் திரவ எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், மற்றொரு வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் லாரி சாலையில் உருண்டோடி, வெடித்து சிதறியது. இதனால், 2 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுக்கு சேதம் ஏற்பட்டது. விபத்தினால் வேறு 3 வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர்.