கோப்புப்படம் 
உலக செய்திகள்

சூடானில் பழங்குடியினர் இடையே மோதல்: 14 பேர் பலி

சூடானில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கார்ட்டூம்,

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட ஒரு பிரிவினருக்கு சொந்தமான கால்நடை பண்ணைக்குள் எதிர் தரப்பினர் புகுந்து கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த மோதலில் ஏராளமான கால்நடைகளும் கொல்லப்பட்டன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்