பமாகோ,
மாலி நாட்டின் பமாகோ நகரில் உள்ள பன்கோனி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த மூன்றடுக்கு மாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.