கோப்புப்படம் 
உலக செய்திகள்

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 16 பேர் பலி

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

காசா,

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

காசா முனையின் மேற்கு கரையில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள அல்-சக்ரா மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து சதி தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டதாக அரபு நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு