உலக செய்திகள்

இஸ்ரேலில் கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் பலி

இஸ்ரேல் நாட்டில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் வடக்கே மவுண்ட் மெரான் பகுதியில் விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்வர்களில் 28 பேர் சிக்கி பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சபீத் பகுதியில் உள்ள ஜிவ் மருத்துவமனை மற்றும் நஹாரியா பகுதியில் உள்ள கலிலீ மருத்துவ மையம் ஆகியவற்றில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு