உலக செய்திகள்

பாகிஸ்தான்: லாகூரில் பயங்கர குண்டு வெடிப்பு 3 பேர் பலி

பாகிஸ்தான்: லாகூர் மார்க்கெட் பகுதியில் பயங்கர குண்டு வெடித்து 3 பேர் பலியானார்கள்.20 பேர் காயம் அடைந்தனர்.

லாகூர்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அனார்கலி மார்க்கெட் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலையானார்கள் 20 பேர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் கூறியதாவது:-

இந்த சம்பவம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் நடந்து உள்ளது. குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதி உறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு