உலக செய்திகள்

உகாண்டாவில் கனமழையால் நில சரிவு; 34 பேர் பலி

உகாண்டா நாட்டில் ஏற்பட்ட கனமழையால் நில சரிவு ஏற்பட்டு 34 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

கம்பாலா,

உகாண்டா நாட்டின் கிழக்கே எல்கான் மலை பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனை அடுத்து ஏற்பட்ட நில சரிவால் மக்கள் மண்ணில் புதைந்து போனார்கள். இதில் 3 கிராமங்களில் உள்ள வீடுகள் புதைந்து போயின.

இதுபற்றி பேரிடர் மேலாண் கழக உயரதிகாரி ஓவர் கூறும்பொழுது, ஆறு ஒன்று கரையை உடைத்து கொண்டு பாய்ந்ததில் பாலம் ஒன்று மூழ்கி போனது. அருகிலுள்ள பகுதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை 31 உடல்கள் மீட்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்