உலக செய்திகள்

எகிப்தில் சுற்றுலாப் பேருத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி

எகிப்தில், சுற்றுலாப் பேருத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கெய்ரோ

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் வெள்ளியன்று மாலை வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் திடீரென குண்டு வெடித்தது.

இதில் வியட்நாமைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து பலனின்றி உயிரிழந்தார்.

பேருந்தின் ஓட்டுநர் உள்பட படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும், பிரமிடின் மாலை நேர விளக்கொளி அலங்காரத்தை இன்னிசையுடன் கண்டு ரசிக்கச் சென்றுகொண்டிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நடந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...