உலக செய்திகள்

ஏமனில் ராணுவ சமையலறை மீது கார் வெடிகுண்டு தாக்குதல்; 4 பேர் பலி

ஏமன் நாட்டின் ராணுவ சமையலறையை இலக்காக கொண்டு இன்று நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஏடன்,

ஏமன் நாட்டில் வடக்கு ஏடன் நகரில் அல் டிரெயின் பகுதியில் ஏமன் ராணுவ படைகளுக்கு உணவு தயார் செய்வதற்காக ராணுவ சமையலறை ஒன்று உள்ளது.

தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் கார் ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு வந்து ராணுவ சமையலறையின் மீது இன்று மோத செய்து குண்டுகளை வெடிக்க செய்துள்ளான்.

இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஏமனில் கடந்த 2015ம் ஆண்டில் சவூதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்டு படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கிய நிலையில் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு நடத்தப்படும் 2வது தாக்குதல் இதுவாகும்.

ஏடனில் கடந்த மாதம் தீவிரவாத ஒழிப்பு தலைமையகத்தின் மீது நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலியாகினர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...