உலக செய்திகள்

மெக்சிகோ விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

மெக்சிகோவின் வெராக்ரூசில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

தினத்தந்தி

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டின் வடக்குப் பகுதியில் மோரோலெஸ் மாகாணத்திலுள்ள எல் லென்சரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக ராணுவ விமானம் கிழக்கு மாகாணம் வெராகுரூசில் உள்ள விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ராணுவ வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (செடெனா) தெரிவித்துள்ளது.

விமான விபத்து குறித்து விசாரணை, வான்வழி ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் நிகழ்வின் சாத்தியமான காரணங்களை அறிவதற்காக, அதனுடன் தொடர்புடைய நிபுணர் குழு அறிக்கைகளை சமர்பிக்கும் என்று செடேனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்