உலக செய்திகள்

பிரான்சில் உள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..!

தெற்கு பிரான்சில் உள்ள மளிகைக் கடை கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

பாரிஸ்,

தெற்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) காலை தெற்கு பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.

இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கடையில் எரிவாயு சிலிண்டர்கள் இருந்திருக்கலாம் அது வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்