மோகடிஷூ,
சோமாலிய நாட்டின் தலைநகரான மோகடிசுவில் உள்ள பிரபலமான விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
சோமாலியா நாட்டின் தலைநகரான மோகசுடிவில் அந்நாட்டு பாராளுமன்றம் மாநில அவைகள் அமைந்து இருக்கும் முக்கிய பகுதியில் இருக்கும் தயா என்ற தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் நுழைவு வாயிலில் வெடி குண்டு நிரப்பிய காரை மோதச்செய்து பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தினர். பின்னர் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த பயங்கரவாதி ஒருவன் , ஓட்டல் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் மற்றும் பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது திடீரென கார் வெடி குண்டுமூலம் மற்றொரு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். பத்திரிகையாளர்கள் 4 பேர் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர்.துப்பாக்கியுடன் தாக்குதல் நடத்த வந்த இரு சந்தேக பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சர்வதேச ஆதரவுடன் சோமாலிய அரசு அமைந்ததில் இருந்து அரசுக்கு எதிராக ஷாபாப் பயங்கரவாத இயக்கம் அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஷாபாப் பயங்கராவ இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.