உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல்; 20 தலீபான் தீவிரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இதில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கஜினி மாகாணத்தின் காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...