உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல்: 89 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 89 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

ஆப்கானிஸ்தானின் தாஹார் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக தலீபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 89 தலீபான் பயங்கரவாதிகள் பலியானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹுல்லா அகமத்ஸி, ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தலீபான்கள் பின்வாங்கிவிட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தாஹார் மாகாணத்தில் மட்டும் 89 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், 67 பேர் காயமடைந்துள்ளனர். தாஹார் மாகாணத்தின் பாஹார்க் மாவட்டம், ஆப்கானிஸ்தான் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை எதிர்த்து தலீபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்