நியாமி,
நைஜர் நாட்டின் மேற்கே தில்லாபெரி பகுதியில் டேரி-டே என்ற கிராமத்தில் புகுந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 15 முதல் 17 வயதுடைய 13 சிறுவர்கள், 4 பெண்கள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் மீது நடந்த இந்த பயங்கரவாத தாக்குதலால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம் என யுனிசெப் அமைப்பு வருத்தம் தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டில் இந்த கிராமத்தில் நடந்த 3வது தாக்குதல் இதுவாகும்.