உலக செய்திகள்

எல்லையில் புகுந்து தாக்குதல்: இந்திய தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்

பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதர் (பொறுப்பு) கவுரவ் அலுவாலியாவை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கவும் சம்மன் அனுப்பியது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்தியா தொடர்ந்து அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 3 பெண்கள் உள்பட பொதுமக்கள் 4 பேர் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இது மனித உரிமை மீறலாகும். இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது. எனவே எல்லையில் அமைதியை ஏற்படுத்த இந்திய படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை