உலக செய்திகள்

“ஜெர்மனியின் நாஜி படையைப் போல் ரஷியா தாக்குதல் நடத்துகிறது” - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

ஜெர்மனியின் நாஜி படையைப் போல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

கீவ்,

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகள் தாக்கியது போல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் ரஷியாவுடனான அனைத்து தூதரக உறவுகளும் துண்டிக்கப்பட்டு விட்டதாக கூறிய அவர், ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ரஷிய நாட்டு மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது ரஷியா தீமையின் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்