உலக செய்திகள்

ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசி எடுத்து கொண்ட ஆஸ்திரேலிய மந்திரி மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசி எடுத்து கொண்ட ஆஸ்திரேலிய சுகாதார மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கேன்பெர்ரா,

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரீசன் பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய சுகாதார மந்திரி கிரெக் ஹன்ட் வார இறுதியில் ஆஸ்டிராஜெனிகா தடுப்பூசி எடுத்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு சந்தேகத்திற்குரிய வகையிலான தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அவர் ஒரு நாள் இரவு முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

அவரது உடல்நிலைக்கு தடுப்பூசியுடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு