உலக செய்திகள்

இரவலாக கிடைக்கும் இளவரசி உடைகள்

ஜப்பானைச் சேர்ந்த குராவ்டியா நிறுவனம், மணமகள்களுக்கு இளவரசி உடைகளை தயாரித்துக் கொடுக்கிறது.

டிஸ்னி கதைகளில் வரும் இளவரசி உடைகளை அச்சு அசலாக செய்து கொடுக்கிறது. ஸ்நோ ஒயிட், சிண்ட்ரெல்லா, ராபுன்ஸெல், ஸ்லீப்பிங் பியூட்டி, ஏரியல், பெல் போன்ற இளவரசிகளின் ஆடைகளை அற்புதமாக உருவாக்கிக் கொடுத்து அசத்துகிறார்கள்.

நாங்கள் உருவாக்கியிருக்கும் ஆடையை அணியும் மணமகள் நிஜமான இளவரசியைப்போல் ஜொலிப்பார். ஆடைகள் மட்டுமின்றி, திருமணம் நடக்கும் அரங்கம், ராஜ விருந்து, மணமகனுக்கான ஆடைகள் போன்றவற்றையும் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்.

திருமணம் நடக்கும் இடத்தை தேவதைக் கதைகளில் வரும் இடம் போன்று உருவாக்கிவிடுவோம். இதுவரை 14 இளவரசிகளின் ஆடைகளை உருவாக்கியிருக்கிறோம். இளவரசி ஆடையின் கட்டணம் 2.37 லட்சம் ரூபாய். இளவரசரின் ஆடையையும் வாடகைக்கு எடுப்பதென்றால் மேலும் 60 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

திருமணம் முடிந்த பிறகு, ஆடைகளை பத்திரமாக திருப்பித் தரவேண்டும் என்பது முக்கியமான ஒன்று. இல்லையேல் உடையின் சேதத்திற்கு ஏற்ப, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டுகிறார்கள், குராவ்டியா நிறுவனத்தினர்.