உலக செய்திகள்

ஜப்பானில் வீட்டின் தரைக்கு அடியில் கண்ணாடி புட்டிகளுக்குள் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு

ஜப்பானில் வீடு புதுப்பிக்கும் பணியில் தரைக்கு அடியில் கண்ணாடி புட்டிகளுக்குள் இருந்து குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த வீடு கடந்த 3 வருடங்களாக யாரும் வசிக்காத நிலையில் இருந்தது. மருத்துவர் ஒருவரிடம் இருந்து சமீபத்தில் மற்றொருவர் இதனை வாங்கி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வீட்டின் தரைக்கு கீழே 3 அல்லது 4 கண்ணாடி புட்டிகளை எடுத்துள்ளனர். அதில் பல குழந்தைகளின் உடல்கள் உள்ளே வைக்கப்பட்டு இருந்த விவரம் தெரிய வந்துள்ளது. அவற்றில் சில தொப்புள் கொடிகளுடன் இருந்துள்ளன.

வேதிப்பொருள் கொண்டு குழந்தைகளின் உடல்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன என தெரிகிறது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு