லண்டன்
இங்கிலாந்தின் ஹெர்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் லூசி லெட்பை (30). இவர் செஷயர் பகுதியில் அமைந்துள்ள செஸ்டர் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரையான காலகட்டத்தில் சுமார் 15 பிஞ்சு குழந்தைகளின் மர்ம மரணம் தொடர்பாக கடந்த 2017 மே மாதம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதன் முறையாக செவிலியர் லூசி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீனிலும் அவர் வெளிவந்துள்ளார். ஆனால் 2019 ஜூன் மாதம், 8 குழந்தைகள் கொலை மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது போலீஸ் காவலில் உள்ள செவிலியர் லூசி மீது தற்போது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்குப் தொடரப்பட்டுள்ளது.இது இவ்வாறு இருக்க, இதே காலகட்டத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் மர்மமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர்.