கோப்புப்படம் 
உலக செய்திகள்

பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி

பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மனாமா,

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் தொழுகைக்காக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பூசி பெற்ற (இரண்டாவது டோசுக்கு 14 நாட்களுக்குப் பிறகு) மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு, மீட்பு சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே மசூதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேக் காலக்கட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் பஹ்ரைனில் உள்ள மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பிறகு, கொரோனா தொற்று குறைந்த பிறகு, படிப்படியாகத் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்