உலக செய்திகள்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை - பலுசிஸ்தான்

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை என்று பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரி நெய்லா குவாட்ரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், மக்கள் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாடு கடந்த பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரியும், மூத்த பெண் அரசியல்வாதியுமான நெய்லா குவாட்ரி பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு திரட்ட உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்துள்ளார்.

அவர் நேற்று முன்தினம் உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் பலுசிஸ்தானின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்தார். அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நெய்லா குவாட்ரி, "ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக எழுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கும் பா.ஜ.க. அரசுக்கும் இன்று ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நாளை கிடைக்காது. ஐ.நா.வில் பலுசிஸ்தானுக்காக இந்தியா நின்றால், எங்கள் நாடு சுதந்திரமாக இருக்கும்போது நாங்களும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்போம்" என்றார்.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி