உலக செய்திகள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 8 லட்சம் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு ரத்து

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 8 லட்சம் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

எந்த ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு முந்தைய ஒபாமா அரசு பொது மன்னிப்பு வழங்கியது. அவர்களுக்கு பணி அனுமதியும் அளித்தது. சிறுவர்கள் என்பதால், அவர்கள் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்தும் நோக்கத்தில், இந்த மன்னிப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பொது மன்னிப்பை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், எந்த ஆவணங்களும் இல்லாமல் பணியாற்றி வரும் 8 லட்சம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இவர்களில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, டிரம்பின் நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. வெள்ளை மாளிகை முன்பு திரண்ட நூற்றுக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக கோஷமிட்டனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் டிரம்பின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.டிரம்பின் இந்த முடிவு மிகவும் கொடூரமானது மற்றும் இரக்கமற்றது என ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு