மாட்ரிட்
தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டில் தவறுதலாக சிலிண்டர் வெடித்ததில் வீடு சேதமடைந்தது. இருவர் அதில் இறந்தனர். மீதமுள்ளவர்கள் இரு இடங்களில் தாக்குதல்களை நடத்தினர்.
மொராக்கோ நாட்டின் காசாபிளாங்கா நகரில் சிலிண்டர் வழங்கியவரை கைது செய்ததாகவும், மற்ரொரு நகரில் தீவிரவாதிகளின் உறவினரை கைது செய்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத செய்தி கிடைத்துள்ளது. ஸ்பெயின் உள்துறை அமைச்சர் சோய்டோ ஸ்பெயின், மொராக்கோ ஆகிய இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆறு தீவிரவாதிகள் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; அதில் இருவர் நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.