உலக செய்திகள்

பிபிசி நேரடி செய்தி வாசிப்பு நிகழ்ச்சியில் ஆபாச வீடியோ

பிபிபி செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தபோது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

பிபிபி செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்தபோது பின்புறத்தில் உள்ள ஒரு திரையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசியில் பணியாற்றி வரும்ராவொர்த் (48) என்ற செய்தி வாசிப்பாளர், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடர் குறித்த செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, இவருக்கு பின்புறத்தில் இருந்த ஒரு கணனியில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. நேரலையில் அந்த காட்சியும் சேர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த காட்சியை லிண்ட்சே ராபின்சன் என்ற பார்வையாளர், தனது முகநூல் பக்கத்தில், அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒளிபரப்பான விளையாட்டு செய்தியில் இதனை யாராவது கவனித்தீர்களா என கேட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பிபிசியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேற்கொண்டு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.


2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்