கோப்புப்படம் 
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீஜிங்கில் வீட்டில் இருந்து பணிபுரியும் உத்தரவு நீட்டிப்பு

பீஜிங்கில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் வீட்டில் இருந்து பணிபுரியும் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பீஜிங்,

சீனாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. நேற்று 802 பேருக்கு பாதிப்பு உறுதியானது. தலைநகர் பீஜிங்கில் தினந்தோறும் சராசரியாக 50 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 99 ஆக அதிகரித்தது.

இதை கருத்தில்கொண்டு, பீஜிங்கில், வீட்டில் இருந்து பணிபுரிவதை தொடருமாறு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களும் வீட்டில் இருந்து ஆன்லைனில் படிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பு வளாகங்களில் உள்ளே செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்கை விட தொழில் நகரான ஷாங்காயில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுமார் 5 லட்சம் பேர் இன்னும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அங்கு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், போக்குவரத்து வசதி திறந்துவிடப்பட்டவுடன் புலம்பெயர் தொழிலாளர்களும், வெளிநாட்டினரும் வெளியேறி விட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு