கோப்பு படம் (AFP)  
உலக செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் 'சர்வாதிகாரி' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை நேற்று ஜோ பைடன் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடைபெற்ற 'ஏபிஇசி' (அபெக்) பொருளாதார உச்சி நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர்கள் அவரிடம், சீன அதிபரை இன்னும் சர்வாதிகாரியாகத்தான் நீங்கள் கருதுகிறீர்களா? எனக் கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜோ பைடன், 'ஜி ஜின்பிங், கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி' என்றார்.

மேலும், சீன அரசாங்கம் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது முற்றிலும் மாறுபட்டது என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன அதிபரை சர்வாதிகாரி என்று விமர்சித்து இருந்த ஜோ பைடன், தற்போது அவரை நேரில் சந்தித்த பிறகும் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் விமர்சித்து இருப்பது கவனிக்கத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு