உலக செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயார் - ஜில் பைடன்

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக அவரது மனைவி ஜில் பைடன் தெரிவித்துள்ளார்.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பயணத்தின் கடைசி கட்டமாக நேற்று கென்யா சென்றார்.

அங்கு தலைநகர் நைரோபியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் தயாராக இருப்பதாக கூறினார்.

முன்னதாக அடுத்த தேர்தலில் போட்டியிடுவது தனது நோக்கம் என்று ஜோ பைடன் நீண்ட காலமாக கூறியிருந்தாலும், அவர் அதை இன்னும் அதிகாரப்பூர்வமாக்கவில்லை, மேலும் அதிபராக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவரது வயது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய பதவிக் காலத்தின் முடிவில் பைடனுக்கு 86 வயது நிரம்பி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...