உலக செய்திகள்

“பில் கிளிண்டன் நலமாக உள்ளார்” - ஜோ பைடன் தகவல்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பில் கிளிண்டனுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு, கொரோனா அல்லாத மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா கலிபோனியாவில் உள்ள இாவின் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

75 வயதான பில் கிளிண்டன் உடல் நலம் தேறி வருவதாகவும் அவா மன உறுதியுடன் இருப்பதாகவும் அவரது செய்தித் தொடாபாளா ஏஞ்சல் உரேயா தெரிவித்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஜோ படைன் பில் கிளிண்டனுடன் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தார். அதோடு அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பில் கிளிண்டனின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் பில் கிளிண்டன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த மோசமான உடல்நல பிரச்சினையும் இல்லை. விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது. அது நாளையா, நாளை மறுநாளா என்பது தெரியவில்லை என கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது